Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் சுந்தரம் பிசினஸ் பி.பி.ஓ அமைக்கிறது!

மதுரையில் சுந்தரம் பிசினஸ் பி.பி.ஓ அமைக்கிறது!
, வியாழன், 31 ஜனவரி 2008 (14:07 IST)
டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பைனான்சின் அயல் அலுவல் பணி பிரிவான சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் மதுரையில் அயல் அலுவல் பணி (பி.பி.ஓ.) அலுவல் பணி அலுவலகத்தை திறக்கிறது. இதனால் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இது குறித்து இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.எஸ். ராகவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் 12 ஆயிரம் சதுர அடி பரப்பில் அயல் அலுவல் பணி அலுவலகத்தை திறக்க உள்ளோம். இது அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் செயல்பட துவங்கும். இதில் அடுத்த ஒரு வருடத்திற்குள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதே மாதிரி திருச்சியிலும் அயல் அலுவல் பணிக்கான அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். இந்த இரண்டு அலுவலகங்களும் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

மதுரையில் அமையும் அலுவலகத்தில் எங்களின் முக்கிய வாடிக்கையாளரான ஆயுள் காப்பீடு நிறுவனத்தின், ஆயுள் காப்பீடு நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.டி. ஸ்ரீனிவாச ராகவன் கூறுகையில், சுந்தரம் பைனான்ஸ் மற்றும் சுந்தரம் பிசினஸ் சரிவீசஸ் நிறுவனங்களுக்கு சென்னை, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் அயல் அலுவல் பணி மேற்கொள்ளும் நிறுவனங்கள் உள்ளன. ஜீலை மாதத்தில் சென்னையைச் சேர்ந்த ப்ரபசனல் மேனெஜ்மென்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளோம். இதனால் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்து உள்ளது.

மதுரை அலுவலகம் செயல்பட துவங்கும் போது, சுந்தரம் பிசினஸ் சரிவீசஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை, இந்த வருடத்திற்குள் 2,500 ஆக உயரும். எங்கள் அயல் அலுவலக பணி நிறுவனம் உள்நாட்டு அயல் அலுவலக பணி துறையில் வங்கி, நிதி சேவை, காப்பீடு நிறுவனங்களுக்கு அயல் அலுவலக பணி செய்து கொடுப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் ஆஸ்திரேலிய நிறுவனங்களும் அயல் அலுவலக பணி செய்து கொடுப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil