Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தா படிக்கலாம் வாங்க

சித்தா படிக்கலாம் வாங்க

Webdunia

பனிரெண்டாமவகுப்பில் முதல் பாடமாகத் தமிழைப் படிக்காதவர்களும் இனி சித்த மருத்துவ பட்டப் படிப்பில் (சேர்ந்து படிக்கலாமஎன்றதமிழக அரசஆணை பிறப்பித்துள்ளது.

பனிரெண்டாமவகுப்பபொதுததேர்வில் பெற்ற மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இதுவரை இந்திய மருத்துவ முறையிலான பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேத மருத்துவம்), பியுஎம்எஸ் (யுனானி மருத்துவம்), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி மருத்துவம்), பிஎன்ஒய்எஸ் (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

நுழைவுததேர்வரத்தசெய்யப்பட்டதஅடுத்தமாணவரசேர்க்கைக்காபுதிஉத்தரவதமிழக அரசவெளியிட்டுள்ளது. அதில்,

சித்த மருத்துவப் படிப்புக்குத் தமிழ் கட்டாயம் என்ற விதியிலிருந்து விலக்கு.

இயற்பியல் - வேதியியல் - உயிரியல் பாடங்களின் கூட்டு மதிப்பெண் விகித கணக்கீடகொண்டமாணவரசேர்க்கநடைபெறுமஎன்றகூறப்பட்டுள்ளது.

எனினும், சித்த மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் முதலாம் ஆண்டில் கட்டாயப் பாடமாகத் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தக் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

மேலும், சித்த மருத்துவம் உள்பட மேற்சொன்ன இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளுக்கான மொத்த படிப்புக் காலம் ஆகியவற்றிலுமமாற்றங்களசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஐந்து ஆண்டுக்காலம் மருத்துவப் படிப்பும் ஆறு மாத காலம் மருத்துவர் பயிற்சியும் இருந்து வந்தது. இனி இந்தக் கல்வி ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுக் காலத்துக்கு ஒரு முறை தொடர்ந்து மூன்று தடவை தேர்வுகள் நடத்தப்படும்; அதாவது மொத்தம் நாலரை ஆண்டுகள் பட்டப் படிப்புக் காலமாகவும் அதன் பிறகு ஓர் ஆண்டு மருத்துவர் பயிற்சிக் காலமாகவும் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil