காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்-2006 விண்ணப்பிக்க விரும்புவோர்...
2006-
ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் மற்றும் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதிவாய்ந்த இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செப்டம்பர் 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் சிறப்புப் பயிற்சிக்காக இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.05ம் தேதியன்று 40 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை ஆங்கிலவழிக் கல்வியில் முடித்தவராக இருத்தல் வேண்டும். (கல்வித்தகுதி குறித்த விவரங்களை பார்க்கவும்).பொறியியல், தொழில்நுட்பம், அறிவியலில் உயர் கல்வி, ஒரு ஆண்டு முதுநிலைப்பட்டப்படிப்பு, 6 மாத கால பயிற்சிக் கல்வி என பல்வேறு பிரிவுகளில் பயில்வோர் இதற்காக விண்ணப்பிக்கலாம்.இந்த ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவோர், பிரிட்டன் செல்வதற்கு மாணவர்களுக்கான கட்டணச் சலுகையை விமானக் கட்டணத்தில் பெறலாம். ஒப்புதல் அளிக்கப்பட்ட பயிற்சி மற்றும் தேர்வுக் கட்டணங்கள்.மாதாந்திர தனிநபர் பராமரிப்பு படி.முதல் ஆண்டு கல்விக்கான புத்தகங்கள் மற்றும் இதர தேவையான பொருட்கள்.பிரிட்டனுக்குள் சென்று வர அனுமதிக்கப்பட்ட கட்டணச் சலுகை.முதல் ஆண்டு கல்விக்காக வரும்போது அவர்களின் உடைகளுக்கான செலவு.ஸ்காலர்ஷிப்பிற்காக திருமணமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், அவர்களின் கல்விக்காலம் 12 மாதங்களுக்கு மேற்பட்டால் பிரிட்டனில் கணவன்-மனைவி இருவரும் ஒரே முகவரில் தங்கியிருந்தால், அவர்களுக்கான செலவினம் அளித்தல் போன்ற சலுகைகளும் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு கிடைக்கும்.இதற்காக விண்ணப்பிப்போர் ஏதாவது ஒரு பாடப்பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். நவம்பர் 15ம் தேதிக்கு முன்பாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று யூகித்துக் கொள்ளலாம்.நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள், அழைப்புக் கடிதங்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நாளன்று தேர்வுக் குழுவினரின் முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மாதிரி விண்ணப்படிவங்கள் இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நிரப்பி ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர்<
http://www.education.nic.in/htmlweb/scho_announcements/ukcommonwealth2006.htm>என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். சந்தேகங்கள் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.