Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சி என்.ஐ.டி-யில் ஐடிஐ அப்ரென்டிஸ் பயிற்சி

திருச்சி என்.ஐ.டி-யில் ஐடிஐ அப்ரென்டிஸ் பயிற்சி
, செவ்வாய், 30 ஜூலை 2013 (13:41 IST)
FILE
உலகப் புகழ் வாய்ந்து திகழ்கின்ற இந்தியாவின் புகழ் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனத்தின் தமிழகத்தின் திருச்சி கிளையில் ஐ.டி.ஐ (எலக்ட்ரீசியன்) முடித்தவர்களுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட தேதி: 22.07.2013

கல்வித்தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஒரு வருடம்.

பயிற்சி தொடங்கும் மாதம்: பயிற்சி தேர்வு செய்யப்படுபவர்கள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.5000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய (Bio-data) முழுமையான விவரங்களுடன் அதாவது தொடர்பு முகவரி, இ-மொயில் முகவரி, தொடர்புகொள்ள வேண்டிய தொலைப்பேசி அல்லது அலைபேசி எண்ணுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

அஞ்சல் முகவரி: The Registrar,

Kind Attention: HOD / EEE

National Institute of Technology,

Tiruchirappalli - 620 015,

Tamil Nadu, India.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பயிற்சியில் பங்கு பெற விரும்பினால் உங்கள் தொடர்பு முகவரி, இ-மெயில் முகவரி, மொபைல் எண்ணுடன் கூடிய முழுமையாக நிரப்பப்பட்ட உங்கள் பயோ-டேடா படிவத்தை பின்வரும் முகவரிக்கு 05.08.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது கல்வி நிறுவனத்திற்கு வருகின்ற விண்ணப்பங்கள் அனைத்தையும் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு இ-மெயில், கடிதம் அல்லது தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 12.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேறுவதற்கான கடைசி தேதி: 05.08.2013

குறிப்பு: சர்வதேச அளவில் நிறுவனத்தின் பெயர் இருப்பதால் இங்கு அப்ரென்டிஸ் பயிற்சி பெறுவது எதிர்கால பணி வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுவதால் வாய்ப்பை வசப்படுத்த்திக்கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil