அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் 11ஆம் தேதி துவங்கும் என்று துணை வேந்தர் மீர் முஸ்தபா ஹ¥சேன் கூறினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதை அடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளையும் விடுதிகளையும் காலவரையின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக மற்றும் அண்ணா பல்கலைக்கழக மதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளை வரும் 9ஆம் தேதி மீண்டும் திறக்க மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் ஒத்தி¨க்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளின் தேர்வுகள் வரும் 11ஆம் தேதி துவங்குகிறது.
தேர்வு அட்டவணைகள் டபிள்யுடபிள்யுடபிள்யு.டிஎன்எம்எம்யு.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் மீர் முஸ்தபா ஹ¥சேன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் 13, 14ஆம் தேதிகளில் நடக்கும் என்று துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.