Publish Date: Sat, 20 Dec 2008 (12:37 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (12:36 IST)
தே.மு.தி.க. சார்பில் காரைக்குடியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.க.வால் நடத்தப் பட்டு வரும் இந்த முகாம் 20ஆம் தேதி காரைக்குடி விஜயா மஹாலில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து தொழிற்சாலைகள், சாப்ட்வேர் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஸ்பின்னிங்மில், டெக்ஸ் டைல்ஸ், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட நிறுவனங் கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித் தகுதிகேற்ப இந்த முகாமில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற விரும்புவோர் தங்களது புகைப்படம் மற்றும் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். இந்த முகாமில் 4 ஆயிரத் திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.