தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 339 தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இணையதளமான www.tn.gov.in/tnusrb என்ற முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ் சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித் துள்ளது.