தீயணைப்பு வீரர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னையில் வரும் 15, 16ஆம் தேதிகளில் உடல் திறன் தேர்வுகள் நடைபெறுகிறது.
எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் காலை 9 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.
இதில் பங்கேற்க அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் ஆணையர் அலுவலகத் தேர்வு மற்றும் பயிற்சி பிரிவை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.