தீயணைப்பாளர் பதவிக்கான உடல் திறனறித் தேர்வு மழைக் காரணமாக டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 339 ஆண் தீயணைப்பாளர்கள் தேர்வுக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வுக்காக 25ஆம் தேதி அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, இன்று நடக்க இருந்த உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வுகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.