Publish Date: Thu, 20 Nov 2008 (13:27 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (13:26 IST)
தே.மு.தி.க. சார்பில் சேலத்தில் நவம்பர் 22ஆம் தேதியும், ஈரோட்டில் 30ஆம் தேதியும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 22-11-2008 (சனிக்கிழமை) அன்று சேலத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை, காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள விஜயராகவாச்சாரியார் மண்டபத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடைபெறும்.
அடுத்து 30-11-2008 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோட்டில், டெலிபோன் பவன் அருகில் உள்ள ஓட்டல் யாளி ரெசிடென்சியில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறும். அதில் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட இளைஞர்கள், பெண்கள் படிப்புக்கு உரிய சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளக்கூடாது. எந்த இடத்தில் வேலை கிடைத்தாலும் அங்கு போய் சேருவதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தகுதியைப்பொறுத்தே வேலை கிடைக்கும் என்பதால் எந்த வகையான சிபாரிசுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.