சென்னை பல்லாவரத்தில் வரும் 8ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த முகாமை வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளன.
இதில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டயம், பட்டதாரிகள் (என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட) டிரைவர், டெய்லர் ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், புகைப்படம், பயோ-டேட்டாவுடன் நேரில் வர வேண்டும்.
மேலும், முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் கூறியுள்ளார்.