ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
கோவை ராணுவ முகாம் சார்பில் நடைபெறும் இத்தேர்வில், படைவீரர் தொழில்நுட்பம், நர்சிங் அசிஸ்டெண்ட் ஆகிய பணியிடங்களுக்கு கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 11ஆம் தேதி நடக்கும் முகாமில் கலந்துகொள்ளலாம்.
படைவீரர் பொதுப்பணிக்கு 12ஆம் தேதி நடைபெறும் தேர்வில், நாமக்கல், நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதே பணியிடத்துக்கு கோவை, திண்டுகல், ஈரோடு, சேலம், தேனியைச் சேர்ந்தவர்களுக்கு 13ஆம் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 6 மணிக்கு வர வேண்டும்.
இதுகுறித்து மேலும் தகவல் அறிய விரும்புபவர்கள் கோவையில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொலைபேசி எண்ணில் (0422- 2222022) தொடர்புகொண்டு கேட்டறியலாம்.