Publish Date: Mon, 20 Oct 2008 (13:53 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (13:52 IST)
பழநி: தமிழ்நாடு தீயணைப்புத் துறை நடத்திய தேர்வில் பழநி அருகே உள்ள பழைய ஆயக்குடி என்ற கிராமத்தை சேர்ந்த 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பழைய ஆயக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் மக்கள் மன்றம் மூலம் இக்கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தீயணைப்பு துறை நடத்திய தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் தேர்ச்சிப் பெற்று, உடல் தகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், இதற்கு முன்னர் இந்த மன்றத்தில் படித்து தேர்வு எழுதிய 24 பேர் வி.ஏ.ஓ. தேர்விலும், குரூப் 2 தேர்வில் 7 பேரும் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். குரூப் 1 முதல் நிலை தேர்வில், 5 பேர் வெற்றி பெற்று, பிரதான தேர்வு எழுதியுள்ளனர். தற்காலிக அரசு ஊழியர்களுக்கான சிறப்பு தேர்வில் 250 பேரும், தமிழ்நாடு காவல்துறை எழுத்து தேர்வில் 15 பேரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.