Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஞ்சிபுரத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி துவ‌க்க‌ம்!

காஞ்சிபுரத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி துவ‌க்க‌ம்!
, புதன், 15 அக்டோபர் 2008 (12:15 IST)
சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங், சோல்ஜர் கிளார்க் உ‌ள்‌ளி‌ட்ட பத‌விகளு‌க்காக ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி காஞ்சிபுரத்தில் இ‌ன்று தொட‌ங்கு‌கிறது.

இததொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ரபழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திடல், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் அருகில், ரயில்வே ரோடு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி நடைபெற உள்ளது.

சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் பதவிக்கு மேல்நிலைக்கல்வியில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் கட்டாயம், மதிப்பெண்கள் ‌விழு‌க்காடகுறைந்தபட்ச மதிப்பெண் 40 ‌விழு‌க்காடஇல்லை. 16.10.85 முதல் 15.4.1991-க்குள் பிறந்து 165 செ.மீ உயரமும், 50 கிலோ எடையும் 77 செ.மீ முதல் 82 செ.மீ வரை மார்பளவும் உள்ள வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் பாண்டிச்சேரி (ூனியன் பிரதேசம்) சேர்ந்தவர்கள் இன்று (15.10.08) தேர்வு செய்யப்படுவார்கள்.

சோல்ஜர் ஜெனரல் டூட்டி பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து 45 ‌விழு‌க்காடு மதிப்பெண் பெற்று 17.10.1987 முதல் 16.4.1991-க்குள் பிறந்து 166 செ.மீ உயரமும், 50 கிலோ எடையும், 77 செ.மீ முதல் 82 செ.மீ மார்பளவும் உள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாளை (16.10.08) தேர்வு செய்யப்படுவார்கள்.

இதே தகுதியுடைய பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து 45 ‌விழு‌க்காடமதிப்பெண் பெற்று 18.10.1987 முதல் 17.4.1991-க்குள் பிறந்து 166 செ.மீ உயரமும், 50 கிலோ எடையும், 77 செ.மீ முதல் 82 செ.மீ மார்பளவும் உள்ள பாண்டிச்சேரி (ூனியன்) திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 17.10.08 அன்று தேர்வு செய்யப்படுவார்கள்.

சோல்ஜர் டிரேட்ஸ்மென் பதவிக்கு 8ஆ‌ம் வகுப்பு தே‌ர்‌ச்‌சி பெ‌ற்‌றிரு‌க்க வேண்டும். 19.10.85 முதல் 18.4.1991-க்குள் பிறந்து 166 செ.மீ உயரமுள்ள 48 கிலோ எடையும், 76 செ.மீ முதல் 81 செ.மீ மார்பளவும் உள்ள வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 18.10.08 அன்று தேர்வு செய்யப்படுவார்கள்.

சோல்ஜர் கிளார்க் பதவிக்கு மேனிலைக்கல்வி கலை, வணிகம், அறிவியல், கல்வியியல் எதுவாக இருப்பினும் படித்து 20.10.85 முதல் 19.4.1991-க்குள் பிறந்த 162 செ.மீ உயரமுள்ள 50 கிலோ எடையுள்ள 77 செ.மீ முதல் 82 செ.மீ வரை மார்பளவுள்ள விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் பாண்டிச்சேரி ூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 19.10.08 அன்று தேர்வு செய்யப்படுவார்கள். தேர்விற்கு காலை 5.30 மணிக்குள் ஆஜராக வேண்டும்.

தேர்விற்கு வருபவர்கள் கல்விச்சான்று, குடியுரிமை சான்று, பள்ளி மாற்றுச்சான்று (எஸ்.எஸ்.எல்.சி. படிப்பிற்கு குறைவாக படித்தோருக்கு மாவட்ட கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன்), பள்ளி நடத்தைச்சான்று, கிராம நிர்வாக அலுவலரின் நடத்தை சான்று, எட்டு கலர் புகைப்படங்கள், என்.சி.சி. விளையாட்டு சான்றுகள், படைவீரர், முன்னாள் படைவீரர் வாரிசு எனில் அதற்கான படைப் பிரிவு, ஆவண காப்பக சான்று, அனைத்து சான்றுகளின் 2 நகல்கள் (ஜெராக்ஸ்) கொண்டுவர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலா‌ம்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil