Publish Date: Tue, 07 Oct 2008 (11:44 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (11:44 IST)
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் பெயரில் திரைப்படப் பல்கலைக்கழகத்தை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கன்னட திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய எடியூரப்பா, காலஞ்சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று குறிப்பிட்டார்.
இப்பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாகவும் இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.