Publish Date: Tue, 07 Oct 2008 (10:39 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (10:38 IST)
தென் மாவட்டங்களைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் வசதிக்காக, வரும் 15 ஆம் தேதி முதல் மதுரையில் புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்படவுள்ளது.
மதுரை கே.புதூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மண்டல வேலைவாய்ப்பு அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே இந்த புதிய அலுவலகம் இயங்கும்.
இதன் மூலம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய இனி சென்னைக்கு வர வேண்டியதில்லை. மதுரையிலேயே அவர்கள் தங்கள் தகுதியை பதிவு செய்து கொள்ளலாம்.
மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலைக் கல்வியைப் பதிவு செய்து கொள்ளலாம்.