அவுட்சோர்சிங் துறையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகில் வளர்ந்து வரும் தலைசிறந்த தகவல் தொழில்நுட்பம், அவுட்சோர்சிங் நகரங்களில் கோவை இடம்பெற்றுள்ளது.
குளோபல் சர்வீசஸ் என்ற அமைப்பும், உலக முதலீட்டு ஆலோசனை நிறுவனமான தோலோன்ஸும் இணைந்து மேற்கொண்ட ஆயிவில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் பட்டியல் இடப்பட்டுள்ள சிறந்த அவுட்சோர்சிங் நகரங்களில் பெங்களூர்,
சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, புனே ஆகியவை இடம்பெற்றுள்ளன. அயர்லாந்தில் உள்ள டப்ளின், பிலிப்பைன்சில் உள்ள மடாகி ஆகியன இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற இரு நகரங்கள் ஆகும்.
எனினும், அவுட்சோர்சிங் துறையில் புதியதாக வளர்ந்து வருபவை எனப் பட்டியலிடப்பட்டுள்ள 50 நகரங்களில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இப்பட்டியலில் சீனாவில் உள்ள ஷாங்காய், பீஜிங், ஷென்ஸின், தலியான், குவான்ஸு மற்றும் செங் டு ஆகியன இடம்பெற்றுள்ளன.
இப்பட்டியலில் இந்தியாவின் கொல்கட்டா, சண்டிகர், கோவை (பட்டியலில் 17வது இடம்) மற்றும் ஜெய்பூர் ஆகியை இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் ஆசியாவில் இருந்து மொத்தம் 19 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.