Publish Date: Mon, 06 Oct 2008 (13:44 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:19 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேருவதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதற்கான விண்ணப்பங்களை சேப்பாக்கத்தில் உள்ள தொலைதூரக் கல்வி நிறுவனத்திலோ, அல்லது சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி மையத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.
பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள், ரூ. 100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.