இந்திய மருத்துவம், ஹோமியோபதி மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு கூடத்தில், மாலை 4 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் இதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 'இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை' என்ற பெயரில் ரூ.500க்கான இரண்டு வரைவோலைகளை தேர்வுக்குழு அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.