Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடஒதுக்கீடு: கிரிமிலேயர் வருமான உச்சவரம்பு உயர்வு!

இடஒதுக்கீடு: கிரிமிலேயர் வருமான உச்சவரம்பு உயர்வு!
, வெள்ளி, 3 அக்டோபர் 2008 (16:53 IST)
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) சேருவதற்காக வருமான உச்ச வரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 'இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரு'க்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2006- ஆம் ஆண்டில் கொண்டு வந்தது.

பொதுப் பிரிவு மாணவர்கள் பாதிக்காத வகையில் இதனை 3 ஆண்டுகளில் படிப்படியாக அமல் செய்யத் தீர்மானித்த அரசு, அதன்படி இவ்வாண்டு 9 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல் செய்துள்ளது.

இடஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு 'இதர பிற்படுத்தப்பட்டோருக்கு' (ஓ.பி.சி.) வருமான உச்சவரம்பை ரூ.2.5 லட்சமாக உள்ளது. இதை ரூ.4.5 லட்சமாக உயர்த்தலாம் என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

புதுடெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த பரிந்துரையை ஏற்பதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) சேருவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அரசின் இம்முடிவு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி டெல்லியில் இதனைத் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil