Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1096 ஐடிஐ-க்கள் மேம்படுத்தப்படும்!

1096 ஐடிஐ-க்கள் மேம்படுத்தப்படும்!
, வெள்ளி, 3 அக்டோபர் 2008 (16:06 IST)
வரும் 2012 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 1096 ஐடிஐ-களை மேம்படுத்த, ரூ. 2,800 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.

இதன்படி நாட்டில் உள்ள 1096 அரசு தொழிற்பயிற்றுனர் பள்ளிகள் (ஐடிஐ), பொது மக்கள்- தனியார் கூட்டுடன் ரூ. 2,800 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இப்பணிகள், வரும் 2012 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

இதேபோல் நாடு முழுவதும் புதியதாக 12 மத்திய பல்கலைக்கழகங்களை அமைக்கவும், உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான விடுதிகள் கட்டும் திட்டத்திற்கும் இக்கூட்டத்தில் அனுமதி தரப்பட்டது.

நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் நிதியில் 3,500 மகளிர் விடுதிகள் கட்டப்படும். இதற்கான செலவை 90: 10 என்ற விழுக்காட்டின் அடிப்படையில் இரு அரசுகளும் பகிர்ந்து கொள்ளும்.

Share this Story:

Follow Webdunia tamil