புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு படிப்புகளுக்கான நீட்டிக்கப்பட்ட கலந்தாய்வு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனையின் கல்விப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் 29-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள நிர்வாகக் கட்டடத்தில் பல்வேறு படிப்புகளுக்கான நீட்டிக்கப்பட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதன்படி பி.எஸ்.சி.(நர்சிங்) படிப்புக்கு 5 இடங்களுக்கும், பி.எஸ்.சி.(மெடிக்கல் லேப் டெக்னாலஜி) படிப்புக்கு 13 இடங்களுக்கும் , பிரி ஹாஸ்பிடல் ட்ரோமா டெக்னீஷியன் படிப்புக்கு 19 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத்தேர்வு மூலம் தேர்வானவர்களின் பெயர்ப் பட்டியல், ஜிப்மர் மருத்துவமனையின் நிர்வாக அறிவிப்புப் பலகையிலும், அதன் இணையதளத்திலும் மாணவர்கள் காணலாம்.