தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் அக்டோபர் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதற்கு முன்பாக அக்டோபர் 18 ஆம் தேதி துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கல்லூரிகளில் உள்ள விருப்பப் பாடக்கல்வி திட்டம், பல்கலைக்கழகங்களில் கல்வி தணிக்கை முறை கொண்டு வருதல், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவுகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரேமாதிரியான பாடத்திட்டம் கொண்டு வருதல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.