தேர்வுகளில் மோசமான செயல்பாட்டைக் காரணம் காட்டி கல்விக் கடன் வழங்குவதை மறுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாணவர் என். கோபிநாத் தாக்கல் செய்த ரிட் மணு மீது தீர்ப்பளித்த நீதிபதி ஏ. குலசேகரன், கல்விக் கடன் கேட்டு மனுதாரர் விண்ணப்பித்த மனுவை பரிசீலிக்கும்படி ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.
கல்விக் கடன் வழங்க மறுப்பதற்கு பள்ளித் தேர்வுகளில் உள்ள மோசமான செயல்பாடு காரணமாக இருக்கக்கூடாது என்று, நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை அணுகி மாணவர் கோபிநாத் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மனுதாரர் மூன்று முறை தேர்வெழுதி பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றதைச் சுட்டிக்காட்டி, அவ்வங்கி கடன் மனுவை நிராகரித்தது.