Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பிறமொழியினர் கட்டணம் ரத்து!

Advertiesment
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பிறமொழியினர் கட்டணம் ரத்து!
, சனி, 20 செப்டம்பர் 2008 (15:13 IST)
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் பிறமொழி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை பள்ளிக் கல்வித்துறை ரத்து செய்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது தமிழ்வழி தவிர பிற மொழிகளில் படிப்போருக்கும் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேல்நிலைப் பாடத்தில் தேர்வுக்கட்டணமாக ரூ. 200 உட்பட மொத்தம் ரூ.225 வசூலிக்கப்பட்டு வருகிறது. செய்முறைகள் இல்லாத பாட மாணவர்கள் ரூ.175 செலுத்த வேண்டியிருந்தது.

இதேபோல் 10-ம் வகுப்பு மாணவர்கள் ரூ.115 ஐ தேர்வுக் கட்டணமாகச் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil