Publish Date: Fri, 19 Sep 2008 (16:41 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (16:41 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி நிறுவனம் வரும் 20 ஆம் தேதி நடத்தவிருந்த எம்.பி.ஏ. நேர்முகத் தொடர் வகுப்புகள் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனம், நடப்பு கல்வியாண்டில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி நேர்முகத்தொடர் வகுப்புகளை நடத்தவிருந்தது.
இதன்படி சென்னை நகரில் நந்தனம், கிண்டி, புரசைவாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்த வகுப்புகள் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு, வரும் 21ம் ஆம் தேதி நடைபெறும் என்று தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.