மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்த உள்ள ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு-2009 (Combined Medical Services Examination,2009 ) பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள், நாடு முழுவதும் சென்னை உள்பட பல்வேறு மையங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான கல்வித் தகுதிகள், பாடத்திட்டம், தேர்வு முறை, தேர்வு மையங்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகள் உள்ளிட்ட விவரங்களை செப்டம்பர் 6ஆம் தேதி வெளியான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ், ரோஜர் சமாஜ்ஜார் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இது பற்றிய கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி மையத்தை நேரிலோ அல்லது 011-23385271, 23381125, 23098543 என்ற தொலைபேசி எண்ணிலோ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
தேர்வுப் பற்றிய விவரம், தேர்வு நடைபெறும் இடம் மற்றும் முடிவுகள் பற்றி தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.