ரிலையன்ஸ் குழுமங்களில் ஒன்றான முத்ரா கல்வி நிறுவனம், விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு பற்றிய பாடத்துக்கான ஓராண்டு முதுநிலை சான்றிதழ் படிப்பு வகுப்புகளை நடத்துகிறது.
முத்ரா இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் அகமதாபாத் (எம்.ஐ.சி.ஏ.) கல்வி மையம், ஹியூஸ்னெட் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான வகுப்புகளை நடத்தவுள்ளது.
பட்டப் படிப்பு முடித்தவர்கள், அல்லது ஏதாவது பட்டம் படித்துக் கொண்டிருப்பவர்கள் இதில் சேரத் தகுதியுடையவர்கள். இதற்கான பயிற்சிக்காலம் ஓராண்டு ஆகும்.
இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தொகை ரூ. 2,000; பதிவுக் கட்டணம் ரூ. 1,500. இத்துடன் பயிற்சிக் கட்டணம் ரூ. 60,000 சேர்த்து, மொத்தம் ரூ. 63,500 கட்ட வேண்டும்.
இதில் சேர விரும்புவோர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து Admission Coordinator, Hughes Communication India Limited, Plot No.1, Sector 18, Electronic City, Gurgaon - 122 015 என்ற முகவரிக்கு, வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியிடப்படும். நவம்பர் 15 ஆம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும். நவம்பர் இறுதியில் பட்டய வகுப்புகள் தொடங்கும்.
இது தவிர, ஊடகங்களுக்கான குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்குகின்றன. இதற்கு பயிற்சிக் கட்டணம் ரூ. 5,000 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணாநகர், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனத்தில் கல்வி மையங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்ஐசிஏ- இந்தியா.நெட் என்ற இணையதள முகவரியில் பெறலாம்.