Newsworld Career News 0809 10 1080910015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ்- 2 தேர்வு: 11 முதல் ஹால் டிக்கெட்!

Advertiesment
பிளஸ் 2 தேர்வு 11 முதல் ஹால் டிக்கெட் பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வு
, புதன், 10 செப்டம்பர் 2008 (13:37 IST)
பிளஸ் 2 தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தனித் தேர்வுகள் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 66 கல்வி மாவட்டத் தலைமையிடங்களில் நுழைவுச் சீட்டுகளைப் பெறலாம். விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பித்ததற்கான ஆதாரங்களுடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை நேரில் அல்லது கடிதம் வாயிலாகத் தொடர்பு கொண்டு நுழைவு அனுமதியைப் பெறலாம்.

மேலும், செய்முறைத் தேர்வு மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகள் குறித்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி விளக்கம் பெறலாம்.

சென்னையில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களுக்கு அண்ணாசாலை மதரஸா ஐ ஆஸாம் மேல்நிலைப் பள்ளியில் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil