Publish Date: Thu, 21 Aug 2008 (13:52 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (13:52 IST)
பல் மருத்துவப் பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 26ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல் மருத்துவப் பட்டப்படிப்பில் 2008-2009ம் ஆண்டுக்கான அடுத்த கட்ட கலந்தாய்வு 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் நடக்கிறது.
கலந்தாய்வுகளுக்கான அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடிதம் கிடைக்காதவர்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கால அட்டவணை டிஎன்ஹெல்த்.ஓஆர்ஜி, டிஎன்.ஜிஓவி.இன் ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.