பொறியியல் கல்வியில் பொதுப் பிரிவுக்கு கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிகபட்சமாக 199.75 என உயர்ந்துள்ளது.
தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 4-ம் தேதி தொடங்குகிறது. ஊனமுற்றோருக்கு 10-ம் தேதி நடைபெறும்.
தொழில் பிரிவுக்கான கட் ஆப் மதிப்பெண் 194.50 என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முதல் நாளான ஜூலை 11ம் தேதி மட்டும் கலந்தாய்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கும். தொடர்ந்து தினமும் காலை 7.30 மணிக்குத் தொடங்கி, காலை 9.30, 11.30, பகல் 2, மாலை 4, 6 ஆகிய நேரங்களில் நடைபெறும்.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைப் பிரிவு விவரம்:
ஜூலை 4: 194.5 முதல் 191 வரை
ஜூலை 5: 188.50 முதல் 182.33 வரை
ஜூலை 6: 177.83 முதல் 173.33 வரை
ஜூலை 7: 170.83 முதல் 164.17 வரை.
ஜூலை 8: 161.83 முதல் 157 வரை.
பிற மாநிலத்தவருக்கான கலந்தாய்வு
ஜூலை 9: 199.67 முதல் 187.47 வரை.
ஊனமுற்றோருக்கான கலந்தாய்வு
ஜூலை 10: 165.5 முதல் 79.25 வரை.
199.5 கட் ஆப் மதிப்பெண்ணில் 181 பேர் இருக்கிறார்கள். 198.5 கட் ஆப் மதிப்பெண்ணில் 1029 பேர் உள்ளார்கள்.
முன்னதாக ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
பி.இ., பி.டெக். கட் ஆப் விவரம்
பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் விவரம். தினமும் காலையில் அந்தந்த கட் ஆப் மதிப்பெண்களில் இருந்து கலந்தாய்வு துவங்கும்.
ஜூலை 11 : 199.75
ஜூலை 12 : 198.75
ஜூலை 13 : 197.25
ஜூலை 14 : 195.75
ஜூலை 15 : 194.25
ஜூலை 16 : 192.75
ஜூலை 17 : 191.25
ஜூலை 18 : 189.75
ஜூலை 19 : 188.25
ஜூலை 20 : 186.75
ஜூலை 21 : 185.25
ஜூலை 22 : 183.75
ஜூலை 23 : 182.25
ஜூலை 24 : 180.75
ஜூலை 25 : 179.25
ஜூலை 26 : 177.75
ஜூலை 27 : 176.25
ஜூலை 28 : 174.75
ஜூலை 29 : 173.25
ஜூலை 30 : 171.75