10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணாக்கர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டுக்கள் வரும் 26, 27ஆம் தேதிகளில் வழங்கப்பட உள்ளது.
நடந்து முடிந்த 10ம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகளில் குறைந்தது 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வுகள் ஜுன் 30-ந்தேதி முதல் ஜுலை 11-ந்தேதி வரை நடக்கிறது.
பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே அனுமதி சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
2008-ம் ஆண்டு மார்ச் மற்றும் அதற்கு முந்தைய மெட்ரிக் தேர்வுகளில் தோல்வியுற்று தனித் தேர்வர்களாக எழுத தேர்வுத்துறைக்கு நேரடியாக விண்ணப்பித்தவர்கள் அனுமதி சீட்டுக்களை 26, 27 தேதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர்கள் வெளியிடப்படும் விநியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.