மத்திய நில அளவியல் விஞ்ஞானிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு:
மத்திய நில அளவியல் கழகத்தில் நிலவியல் (இளநிலை) பிரிவு-ஏ மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் நீர் நிலவியல் (விஞ்ஞானி- பி) பிரிவு-ஏ, நீர் நிலவியல் உதவியாளர் பிரிவு-பி ஆகிய பணியிடங்களுக்கு மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) நடத்தும் இந்த ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 6-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்தத் தேர்வுக்கான கல்வித் தகுதி, தேர்வு முறை, தேர்வுக்கான பாடத் திட்டங்கள், தேர்வு மையங்கள், விண்ணப்பங்களை அனுப்பும் முறை, அனுப்ப வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட தகவல்களை 2008 ஜூன் 14-ம் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் தெரிந்து கொள்ளலாம்.
யூபிஎஸ்சி.ஜிஒவி.ஐஎன் என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சந்தேகம் எதுவும் இருப்பின் தில்லி யூ.பி.எஸ்.சி வளாகத்தின் வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது 011-2338 5271, 011-2338 1125, 011-2309 8543 என்ற தொலைபேசி எண்ணிலோ, எல்லா வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.