Publish Date: Sat, 19 Apr 2008 (11:52 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (11:51 IST)
சென்னை: தமிழக அரசு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) விடைத்தாள்கள் இன்று முதல் திருத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மொழிப் பாட விடைத்தாள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவேறவுள்ளன.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் இன்று முதல் துவங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 மையங்கள் வீதம் தமிழ்நாடு 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
Webdunia
Publish Date: Sat, 19 Apr 2008 (11:52 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (11:51 IST)