சென்னையில் வசிக்கும் வேலை வாய்ப்பற்ற சிறுபான்மையின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் அளிக்கும் பயிற்சியை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோருக்கான நேர்காணல் வரும் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறுகிறது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகையில் காலை 11 மணி முதல் மாலை 5 வரையில் இந்த நேர்காணல் நடைபெறும்.
ட்ரெக்கஸ்டெப் ஸ்கில்ஸ் (9840740323), பாரத் இண்டஸ்ட்ரீஸ் ஸ்கூல் (9962394964), ஐ.ஐ.டி. கம்யூனிடி காலேஜ் (044-23631721), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (9444031873), இஸ்ரத் வாலண்டரி சர்வீஸ் சென்டர் (141, டாக்டர் பெசன்ட் சாலை, இரண்டாவது மாடி, ராயப்பேட்டை, சென்னை.) ஆகிய நிறுவனங்கள் இப்பயிற்சிகளை அளிக்கும்.
18 வயது முதல் 32 வயதுக்குட்பட்டோர் ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருந்தால் இதில் பங்கேற்கலாம்.
மதிப்பெண் சான்று, சாதிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, வருமானச் சான்று, இரு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.