Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதி அரேபியாவில் குழந்தைநல மருத்துவர்களுக்கு வேலை!

சவுதி அரேபியாவில் குழந்தைநல மருத்துவர்களுக்கு வேலை!
, செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (11:21 IST)
சவுதி அரேபியா அரசு மரு‌த்துவமனை‌யி‌லகுழந்தைநல மருத்துவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவ‌ம‌ற்று‌‌மநிர்வாக இயக்குனர் பி.ஆர்.பிந்துமாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சவுதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குழந்தைகளுக்கான இதய மருத்துவ மையத்தில் பணியாற்ற இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் குழந்தைநல மருத்துவர்கள்,

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் மகளிர் இ.சி.ஜி. டெக்னீசியன்கள், மகளிர் ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னீசியன்கள், குழந்தைநல கேத்தரைசேஷன் டெக்னீசியன்கள், 3 ஆண்டு அனுபவம் பெற்ற பர்யூசனிஸ்டுகள், தீவிரி சிகிச்சைப் பிரிவில் 3 ஆண்டு அனுபவம் பெற்ற பெண் நர்சுகள் தேவைப்படுகிறார்கள்.

உரிய கல்வித்தகுதி, பணி அனுபவம் பெற்ற சிறப்பு மரு‌த்துவ‌ர்க‌ள், மருத்துவ பணியாளர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் ம‌ற்றும் கலர் போட்டோவுடன் விண்ணப்பத்தை சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

முகவரி : தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழ்நாடு வீட்டுவசதி வணிக வளாகம், முதல் தளம், எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை 600 020.

Share this Story:

Follow Webdunia tamil