ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை 2007-ம் ஆண்டில் மட்டும் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
சர்வதேச ஆங்கில மொழிப் புலமை பரிசோதனை தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ்., பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கல்வியாளர்களால் நடத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டில் மட்டும் இத்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இமாலய எண்ணிக்கை உலக மொழிகளில் ஒன்றாகத் திகழும் ஆங்கில மொழியின் அவசியத்தை உணர்த்துகிறது.
68 நாடுகளை சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், அரசு நிறுவனங்கள் இத்தேர்வை அங்கீகரித்துள்ளன. இதனால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாகிறது.
இத்தேர்வை உலகம் முழுவதிலும் 6 ஆயிரம் அமைப்புகள் நடத்துகின்றன. பிரிட்டனில் மட்டும் ஆயிரத்து 300 நிறுவனங்கள் உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நேர்முகத்தேர்வு உட்பட ஆண்டுக்கு 48 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பிரிட்டிஷ் கவுன்சிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஐந்து நட்சத்திர தரமிக்க தேர்வு மையம், புத்துணர்வு பயிற்சி, இலவச புத்தகங்கள், இணையதள தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., வசதி உட்பட பல்வேறு சிறப்புகளை தேர்வாளர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் அளிக்கிறது.
சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, கோட்டயம், கோவை, திருவனந்தபுரம், திருச்சி, மதுரை, மங்களுர், புதுச்சேரி, திருச்சூர், கோழிக்கோடு, விசாகப்பட்டிணம், விஜயவாடா ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்துகிறது.
மேலும் விபரங்களுக்கு:
பிரிட்டிஷ் கவுன்சில்
737, அண்ணா சாலை, சென்னை 600 002
தொலைபேசி: 044-42050600.