Newsworld Career News 0712 10 1071210023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிட்டனுக்கு மாணவர்கள் விசா : சென்னையில் கருத்தரங்கம்!

Advertiesment
பிரிட்டன் கல்வி நிலையங்கள் மாணவர்கள் விசா  பிரிட்டிஷ் கவுன்சில் மேரி ஃபிட்ஜெரால்ட்
, திங்கள், 10 டிசம்பர் 2007 (14:31 IST)
பிரிட்டன் கல்வி நிலையங்களில் ஜனவரி/பிப்ரவரி 2008 ஆம் ஆண்டிற்காக இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கும், உயர் கல்விப் படிப்புக்காக எதிர்காலத்தில் பிரிட்டன் செல்லும் நோக்கமுடைய மாணவர்களுக்கும் “மாணவர்கள் விச” குறித்து சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.

தேதி : டிசம்பர் 20, வியாழக்கிழமை

இடம்: பிரிட்டிஷ் கவுன்சில், 737, அண்ணா சாலை, சென்னை- 600 002.

நேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை

பிரிட்டிஷ் தூதரகத்தின் நுழைவு அனுமதி அதிகாரி மேரி ஃபிட்ஜெரால்ட் மாணவர்களிடத்தில் சமீபத்திய விசா நடைமுறைகள், அதாவது கல்வியியல் தொழில் நுட்ப அங்கிகாரத் திட்டம் உட்பட பிரிட்டன் செல்வதற்கான பல்வேறு நடைமுறைகள் குறித்து விளக்குகிறார். மேலும், புதிய மாணவர் பயண விசா விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்கவேண்டிய பயனுள்ள ஆவணங்கள் ஆகியவை குறித்தும் அவர் விளக்குகிறார்.

மாணவர்கள் விசா குறித்து மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

தொலை பேசி எண்: (044) 4205 0600.

மின்னஞ்சல்:

[email protected]
www.educationuk-in.org

Share this Story:

Follow Webdunia tamil