10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தோட்டகலை தொழிலாளர்கள் 1083 பேர் பணி நிரந்தரம் செய்தும், அவர்களுக்கு காலமுறை ஏற்ற ஊதியம் வழங்கியும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1083 பணியாளர்களால் தங்கள் பணியினை நிரந்தரம் செய்யுமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் இவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவர்களின் குடும்ப நலன் கருதி, அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் 1083 பணியாளர்களின் பணியினை நிரந்தரம் செய்தும், அவர்களுக்கு காலமுறை ஏற்ற ஊதியம் வழங்கியும் ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.