பாரதிதாசன் பல்கலையில் மாணவர் குறைதீர்ப்பு பிரிவு
நமது திருச்சி செய்தியாளர்
Publish Date: Mon, 08 Oct 2007 (16:50 IST)
Updated Date: Mon, 08 Oct 2007 (16:49 IST)
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவர் குறை தீர்க்கும் புதிய பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய துணை வேந்தர் மு. பொன்னவைக்கோ, பல்கலைக்ழக தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தனிக்குழு அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படுவார் என்று பொன்னவைக்கோ கூறினார்.