Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடுகளைச் சுற்றி- கியூபா

நாடுகளைச் சுற்றி- கியூபா

Webdunia

நில அமைப்பில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாகவும் கொள்கை கோட்பாடுகளில் மிகத் தொலைவிலும் உள்ள உலகின் 7வது பெரிய தீவு கியூபா. அமொக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்த நாடு. 1898-ல் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுபட்டது. 1920ஆம் ஆண்டில் சுதந்திரக் குடியரசு என்ற நிலையைப் பெற்றது. ஆனால் ஏனைய நாடுகளுடன் கியூபா எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது.

அமெரிக்காவின் ஆசி பெற்ற குடியரசாக கியூபா தொடர்ந்தது. 1952ல் பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா (Bill Batisda) ஆட்சி அதிகாரத்தை இராணுவ புரட்சி மூலமாக கைப்பற்றினார். எனினும் எல்லா சீர்கேடுகளும் மலிந்த நாடாக கியூபா மாறியது, மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் பாட்டிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய படையின் தலைமை தளபதியாக உருவெடுத்தவர் பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro). கியூபாவின் ஒவ்வொரு பகுதிக்கும் போய் இளைஞர்களை திரட்டிய காஸ்ட்ரோ பாடிஸ்டாவின் மான்கடா (Moncada) படைத்தளத்தை (ஜூலை 26, 1953 அன்று நள்ளிரவில்) தாக்குவதற்கு திட்டமிட்டார். அந்த திட்டம் தோல்வியடைந்து பிடல்காஸ்ட்ரோ உள்ளிட்ட புரட்சியாளர்கள் சிறை படுத்தப்பட்டார்கள்.

அப்போது நீதிமன்றத்தில் வரலாற்று புகழ் பெற்ற தன்னுடைய வாக்கு மூலத்தை பிடல்காஸ்ட்ரோ பதிவு செய்தார். கியூபா மக்கள் தங்களது விடுதலையை வென்றடைய வேண்டும் என்று விரும்பும் போது வானூர்திகளைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளை வெறும் கைகளால் தலை கீழாக திருப்புவார்கள். இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை என்னை தண்டியுங்கள். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று முழங்கினார். துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் பிடல். 1959-ம் ஆண்டில் பாடிஸ்டா நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு புரட்சி வென்றது. ஆட்சி இந்த புரட்சிக்கு சொந்தக்காரரான பிடல்காஸ்ட்ரோவின் கைகளுக்கு மாறியது.

கடந்த 47 ஆண்டுகளாக கியூபாவின் பிரதமராகவும் பின்னர் அதிபராகவும் விளங்கிய பிடல் காஸ்ட்ரோ (வயது 80) குடல் நோய் பாதிப்பு காரணமாக கியூபாவின் அதிபர் பதவியில் இருந்து தாற்காலிகமாக விலகி இராணுவ அமைச்சராக இருந்த தன்னுடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோ (Raul Castro) விடம், அதிபர் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் என்பது தான் தற்போதைய செய்தி.

சுருக்கக் குறிப்புகள
தலைநகர்: ஹவான
பரப்பு: 1,14,524 ச.கீ.ம
மொழி: ஸ்பானிஷ
மக்கள் தொகை: 1.13 கோடி
சமயம்: கிருத்தவம், சமயமற்றவர
கல்வி: தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை இலவசம், 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி. தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த அனுமதி இல்லை.
தொழில்: சுற்றுலா மிகப் பெரிய தொழிலாக வளர்ந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil