மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை (11ஆம் தேதி) பிற்பகல் முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தின் அருகே உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். அந்தந்த மாவட்ட தேர்வு மையங்கள் அந்தந்த மாவட்டத்தில் அறிவிக்கப்படும். ஹால்டிக்கெட்டை பெற்றதும் மாணவர்கள் அதில் ஏதாவது தவறு இருந்தால் தேர்வுத்துறைக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக எழுத்துத்தேர்வையும் எழுதவேண்டும். செய்முறைதேர்விலும் கலந்து கொள்ளவேண்டும்.
சென்னையில் உள்ள அனைத்து கல்வி மாவட்ட மாணவர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள மதரஸா அஸாம் மேல்நிலைப்பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
திருவள்ளூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருவள்ளூரில் உள்ள டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ளவர்கள் காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியிலும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் உள்ளவர்கள் செங்கல்பட்டு செயிண்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.