இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் (இக்னோ) வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 15ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகம் காய்கறிகள், பழங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், பருப்பு, எண்ணெய்வித்துகளில் இருந்து பொருள்கள் தயாரித்தல், பட்டு வளர்த்தல், பால், அசைவ உணவு உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் ஆகிய படிப்புகளை நடத்துகிறது.
இப் படிப்புகளில் சேர ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பிளஸ்-2 கல்வித்தகுதி ஆகும். கிராமப்புற மாணவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு இக்னோ மண்டல அலுவலகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி என்ற முகவரியிலோ அல்லது 044-22541919, 22542727 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.