சஹர்சா : பீகார் மாநிலத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த 16 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆய்வின் போது, இந்த ஆசிரியர்களின் சான்றிதழ்கள் போலியானது எனக் கண்டு பிடிக்கப்பட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி மஹேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் மேலும் இதுபோன்று சந்தேகத்துக்கிடமான மற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சஹர்சா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 4,100 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.