Publish Date: Tue, 30 Dec 2008 (14:14 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (14:14 IST)
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு, பார்வையற்றோர்களுக்கான பிரிவில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்றும் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.