ரிசர்வ் வங்கி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவ்வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் பி.ஆர். ஜோசப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரூபாய் நோட்டுகள் மற்றும் சுத்தமான நோட்டு கொள்கைப் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி கட்டுரைப் போட்டி நடத்துகிறது. 3 பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு 'தன் கதையை சொல்லும் கரன்சி நோட்டு' (500 வார்த்தைகளுக்கு மிகாமல்) 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு 'களைந்தெறிவோம் கள்ளநோட்டை, காப்பாற்றுவோம் நம் நாட்டை' (1,500 வார்த்தைகளுக்கு மிகாமல்).
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக கட்டுரைகளை 'மண்டல இயக்குநர், பாரத ரிசர்வ் வங்கி, 15, ராஜாஜி சாலை, சென்னை-1' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000, 2-வது பரிசாக ரூ.3,000. 3-வது பரிசாக ரூ.2,000மும் வழங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி பணியாளர்களின் குழந்தைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதியில்லை.
மேலும் விவரங்களுக்கு 044-25399212, 25399167 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்" என்று கூறப்பட்டுள்ளது.