2008ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் தொலைதூர படிப்பில் சேர விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி இறுதி நாள் என்று அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
காலண்டர் ஆண்டில் சேருவதற்கு மேலும் கால நீட்டிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
தகுதியுடைய மாணவர்கள் அருகில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகக் கல்வி மையங்களில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து அட்மிஷன் பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.