அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்பு நேரத்தில் செல்பேசி பயன்படுத்தினால் முதலில் 10 நாள இடைநீக்கமும், தொடர்ந்து அதே மாணவர் இரண்டாவது முறையாக ஈடுபட்டால் 30 நாள் இடைநீக்கமும் செய்யப்படுவார்கள் என்று துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றம் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மாணவ, மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்தி நன்கு படித்து, நல்ல வேலைவாய்ப்பைப் பெற்று அவர்களது பெற்றோர்களின் கனவை நிறைவேறற வேண்டும் என்பதால் செல்பேசி பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு செல்வதற்கு முன்னால் செல்பேசிகளை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் வகுப்பு நேரத்தில் செல்பேசியை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.