கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ளி. நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இம்மாதம் 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் புயல், மழையினால் ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.