Publish Date: Wed, 17 Dec 2008 (14:20 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
பள்ளிகள் பராமரிப்புக்காக செலவினம் செய்வதற்கு அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிதி அதிகாரம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில், "மின்இணைப்பு பழுது பார்த்தல், மின்சார கட்டணம், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தளவாடங்கள் பழுதுபார்த்தல், பள்ளிவளாகம் சீர்செய்து பராமரித்தல், விழாசெலவினம், வகுப்பறைகள் பராமரிப்பு போன்ற பள்ளிகள் பராமரிப்புக்காக செலவினம் செய்வதற்கு அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் நிதி அதிகாரம் அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.